How To view ‘Virtual Reality’ ‘Google Cardboard’ as learning platform that makes it fun to learn. எப்படி ‘Virtual Reality’ அனுபவத்தை பெற ‘Google Cardboard ' பயன்படுத்தி கற்றல் கற்பித்தலின் போது மாணவர்களின் ஈடுபாட்டினை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தயார் செய்வது.



Google Cardboard என்றால் என்ன? எப்படி ஆசிரியர்கள் Google Cardboard பயன்படுத்தி சிறப்பான கற்றல் கற்பித்தலை வகுப்பறையில் வழிநடத்துவது என்பதை அறியலாம். ‘Virtual Reality’ எனப்படுவது மெய்நிகர் வடிவத்தில் உண்மையான இடங்களை 360 பாகையில் காட்சி வடிவத்தில் பார்ப்பதாகும். அதாவது, நாம் ஓர் இடத்திற்குச் செல்லாமலேயே அந்த இடத்தை 360 பாகையில் பார்ப்பதே ‘Virtual Reality’ எனப்படும். 
இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருந்தாலும் பலரால் எளிமையான வழியில் பயன்படுத்தக்கூடியதாக இல்லை. எனவே, தற்பொழுது Google நிறுவனத்தின் புதிய முயற்சியால் அனைத்து தரப்பினரும் தன்னுடைய விவேக கைபேசியைக் கொண்டே ‘Virtual Reality’ அனுபவத்தைப் பெற முடியும் வகையில் ‘Google Cardboard’ செயலியைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை அனைவரும் எளிமையான வகையில் பயன்படுத்துவதற்காக ‘open source’ முறையில் வெளியிட்டுள்ளனர். ‘Google’ நிறுவனம் வெளியிட்டுள்ள ‘open source’ ‘coding’ கொண்டு யார் வேண்டுமானாலும் ‘Virtual Reality’ மெய்நிகர் வடிவத்தில் உண்மையான இடங்களை 360 பாகையில் காட்சி வடிவத்தில் உள்ளதைப் போன்று உருவாக்கவும் பதிவும் செய்ய முடியும்.
எனவே, ஆசிரியர்கள் எப்படி எளிமையான முறையில் Google Cardboard-யை வகுப்பறையில் பயன்படுத்துவது என்பதை அறியலாம்.
1. முதலில் உங்கள் கைபேசி Google Cardboard பயன்படுத்தக்கூடிய தரத்தில் உள்ளவையா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதாவது 5’ அல்லது 6’ அளவு மின்திரையாக இருக்க வேண்டும். மேலும், Android பதிப்பு Lollipop’ அல்லது அதற்கு மேல் உள்ள Android பதிப்புகளாக இருக்க வேண்டும்.
கூகுள் கார்போர்ட் அல்லது Google Cardboard Inspired கண்ணாடியை வாங்கவேண்டும். இதனை வாங்குவதற்கு ‘shopee’ அல்லது ‘Lazada’ இணைய வியாபர தளத்தில் வாங்கலாம். மேலும், கீழே வழங்கியுள்ள காணொலி கொண்டு சுயமாகவும் தயாரிக்கலாம். 
அதன் பிறகு ‘Google Play Store’ Cardboard எனப்படும் செயலியை தங்களது கைபேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

நீங்கள் வாங்கிய Google Cardboard கண்ணாடியில் ஒரு QR Code இருக்கும். அதனை கூகுள் கார்ட்போர்ட் செயலியால் ‘scan’ செய்வதன் மூலம் உங்கள் கூகுள் கார்ட்போர்ட் கண்ணாடியும் உங்கள் கைபேசியும் இணைக்கப்படும். 

சுயமாக Google Cardboard தயாரித்தவர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம். 

உங்களிடம் இருக்கும் Google Cardboard கொண்டு காணொலி, திரைப்படங்கள், ‘Youtube’ 360 பாகை வடிவத்தில் பதிவு செய்யப்பட்ட காணொலிகளைப் பார்க்கலாம்.
கீழே வழங்கியுள்ள காணொலி கொண்டு திரைப்படங்கள், ‘Youtube’ 360 பாகை வடிவத்தில் பதிவுச் செய்யப்பட்டக் காணொலிகளைப் பார்க்கலாம்.
https://youtu.be/L_tqK4eqelA

Comments

Post a Comment