Use kahoot as learning platform that makes it fun to learn. எப்படி 'kahoot' பயன்படுத்தி கற்றல் கற்பித்தலின் போது மாணவர்களின் ஈடுபாட்டினை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தயார் செய்வது.



கற்றல் கற்பித்தலின் போது மாணவர்களின் ஈடுபாட்டினை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தயார் செய்வது ஆசிரியரின் தலையாய கடமையாகும். அவ்வகையில் இணையத்தளத்தில் பலவகையான அகப்பக்கங்கள் இலவசமாக இயங்கி வருகின்றன. அதில் ஒன்றுதான் https://kahoot.com/


‘Kahoot’ உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான ஆசிரியர்கள், நிறுவனங்கள் பயன்படுத்தப்படும் இணைய விளையாட்டு தளமாக இயங்குகின்றது. இந்தத் தளத்தின் பயன்பாடு விளையாட்டு முறையில் ஆசிரியர்கள்-மாணவர்களிடமும், நிறுவனங்களின் உரிமையாளர்கள்-தொழிலாளர்களிடமும் விளையாட்டு முறையில் கேள்விகள் தயார் செய்து அறிவாற்றலை வளர்க்கும் அடிப்படையிலான தளமாக திகழ்கின்றது.

ஆசிரியர்கள் எப்படி 
https://kahoot.com பயணராக சேர்ந்து, மாணவர்களின் ஈடுபாட்டினை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தயார் செய்வது என்பதனை அறியலாம்.

1.   முதலில் https://kahoot.com/ அகப்பக்கத்திற்குச் செல்லவும்.

2.  உங்களை kahoot பயணராக (sign up) பதிவு செய்து கொள்ளவும். முற்றிலும் இலவசம்.



3. ஆசிரியராக தேர்ந்தேடுத்துக் கொள்ளவும்.




4. உங்களுடைய ‘Google account’ கொண்டு ‘kahoot’ பயணராக பதிவு(signup) செய்து கொள்ளவும்




5.பாரத்தை பூர்த்தி செய்து ‘Join Kahoot’ செய்யவும்




6.‘kahoot’ பயணராக பதிவு செய்த ‘Google account’ கொண்டு ‘Log In’ செய்யவும்.








7.இணைய விளையாட்டினை தயார் செய்ய ‘create’ தெரிவுசெய்யவும்.





8.கேள்விகளை உருவாக்க ‘Quiz’ தெரிவு செய்யவும்






9.இணைய விளையாட்டுக்கான முகப்பைத் தயார் செய்யவும். இந்தப் பாரத்தைப் பூர்த்தி செய்யவும்.



10. ‘Add question’ தெரிவு செய்து கேள்விகளை உருவாக்கவும்.




11. 'Question' என்ற இடத்தில் கேள்விகளைத் தட்டச்சு செய்து, சரியான பதிலையும் பிழையான பதிலையும் தட்டச்சு செய்யவும்.





12.மேலும் கேள்விகளை தட்டச்சு செய்ய ‘Add question’ தெரிவு செய்து கேள்விகளை உருவாக்கவும்.


13. நீங்கள் தயார் செய்த ‘kahoot’ இணைய விளையாட்டினை மாணவர்களுடன் விளையாட ‘Play it’ தெரிவு  செய்யவும். 




14. இணைய விளையாட்டினை விளையாடுவதற்குத் தனியால் (classic) முறையிலும் அல்லது குழு (Team mode) முறையிலும் தெரிவு செய்ய வேண்டும்.






15. இம்மாதிரியான 'Game pin' கிடைக்கப்பெற்றவுடன், மாணவர்களின் கணினியில் https://kahoot.it/ அகப்பக்கத்திற்குச் சென்று 'Game pin' தட்டச்சு செய்ய பணிக்கவும்









16. மாணவர்களின் கணினியில் https://kahoot.it/ அகப்பக்கத்திற்குச் சென்று 'Game Pin' தட்டச்சு செய்ய பணிக்கவும்.






17. இணைய விளையாட்டை விளையாடும் மாணவரின் பெயரைத் தட்டச்சு செய்ய பணிக்கவும். அதன்பிறகு, ‘OK,go!’ தெரிவு செய்யவும்.





18. மாணவர்கள் ஒவ்வொருவரும் ‘Game pin’ கொண்டு இணைய விளையாட்டில் சேர்ந்தவுடன் பெயர் பட்டியலை காண முடியும்.  அனைத்து மாணவர்களும் இந்த விளையாட்டில் சேர்ந்ததை உறுதிப்படுத்திய பிறகு ‘Start’ தெரிவு செய்யவும்.



19. மாணவர்கள் கேள்விகளை வாசித்து தன் பதிலை கணினியில்  தெரிவு செய்யவும். 






20. மாணவர்கள் கணினியில் கீழே இடம்பெற்றுள்ள வர்ணங்களை மட்டுமே காண முடியும். ஆகவே, ஆசிரியர் கேள்விகளை திரையில் காண்பிக்க வேண்டும். இவ்வாறு, திரையில் கேள்விகள் காண்பிப்பதால் எழுத்துகள் பெரிதாக இருக்கும், மாணவர்களுக்கும் கேள்விகள் வாசிப்பதற்கு இலகுவாக அமையும்.



இந்த post--ல் எப்படி 'kahoot' பயன்படுத்தி கற்றல் கற்பித்தலின் போது மாணவர்களின் ஈடுபாட்டினை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தயார் செய்வதைப் பார்த்தோம். அடுத்தது எப்படி 'Quizizz' பயன்படுத்தி கற்றல் கற்பித்தலின் போது மாணவர்களின் ஈடுபாட்டினை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தயார் செய்வது  என்பதை அறியலாம்.

Comments