How To Use ‘Quizizz’ as learning platform that makes it fun to learn. எப்படி ‘Quizizz' பயன்படுத்தி கற்றல் கற்பித்தலின் போது மாணவர்களின் ஈடுபாட்டினை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தயார் செய்வது.
கற்றல் கற்பித்தலில் பல்வேறு அணுகுமுறையைக் கையாளுவது ஆசிரியரின் முதன்மை கடமையாகும். கற்றல் கற்பித்தலில் நடவடிக்கைகள் பல்வகை செய்து போதிக்கும் போது மாணவர்களின் ஈடுபாட்டினை நன்கு மேம்படுத்த முடியும். அவ்வகையில் ஆசிரியர்கள் நடவடிக்கைகள் தயார் செய்வதற்குத் தொழிற்நுட்பம் அறிவும் அத்தியவசியமான ஒன்றாகும். கடந்த பதிப்பில் 'kahoot' இணைய விளையாட்டினைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் எப்படி மேற்கொள்வது என்பதை அறிந்தோம். இந்தப் பதிப்பில் ஆசிரியர்கள் எப்படி https://quizizz.com/join பயணராக சேர்ந்து, மாணவர்களின் ஈடுபாட்டினை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தயார் செய்வது என்பதை அறியலாம்.
'Quizzes' உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் பயன்படுத்தப்படும் இணைய விளையாட்டுத் தளமாக இயங்குகின்றது. இந்தத் தளத்தின் பயன்பாடு விளையாட்டு முறையில் கேள்விகள் தயார் செய்து அறிவாற்றலை வளர்க்கும் அடிப்படையிலான தளமாக திகழ்கின்றது.
ஆசிரியர்கள் எப்படி https://quizizz.com/join பயணராக சேர்ந்து, மாணவர்களின் ஈடுபாட்டினை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தயார் செய்வது என்பதைப் பார்க்கலாம்.
1.முதலில் https://quizizz.com/join அகப்பக்கத்திற்குச் செல்லவும்.
1.முதலில் https://quizizz.com/join அகப்பக்கத்திற்குச் செல்லவும்.
2.உங்களை 'Quizzes' பயணராக (sign up) பதிவு செய்து கொள்ளவும். முற்றிலும் இலவசம்.
3. உங்களுடைய
‘Google account’ கொண்டு ‘quizizz’ பயணராக பதிவு (sign up) செய்து கொள்ளவும்.
4. ஆசிரியராக தேர்ந்தேடுத்து கொள்ளவும்.
5. ‘quizizz’ பயணராக பதிவு செய்த பிறகு ‘Google account’ கொண்டு ‘Log
In’ செய்யவும்.
6. கேள்விகளை உருவாக்க ‘Create a new quiz’ தெரிவு செய்யவும்.
7. 'Enter quiz name' என்ற இடத்தில் தலைப்பு உள்ளிடு செய்து மொழியைத் தெரிவு செய்யவும்.
8. 'Create new qustion' தெரிவு செய்யவும்.
9. 'Write your question here' என்ற இடத்தில் கேள்விகளைத்
தட்டச்சு செய்து, சரியான பதில்களையும் பிழையான பதிலையும் தட்டச்சு செய்யவும்.
10.இணைய விளையாட்டிற்கான கேள்விகளைத் தயார் செய்த பிறகு 'Live Game' தெரிவு
செய்யவும்.
11.இம்மாதிரியான் ‘Game pin number’ கிடைக்கப்பெற்றவுடன், மாணவர்களின் கணினியில்
join.quizizz.com அகப்பக்கத்திற்குச் சென்று ‘Game pin’ தட்டச்சு செய்ய பணிக்கவும்.
12. மாணவர்களின் கணினியில் join.quizizz.com அகப்பக்கத்திற்குச் சென்று 'Game pin' , மாணவரின் பெயரைத் தட்டச்சு செய்ய பணிக்கவும்.
13.
மாணவர்கள் ஒவ்வொருவரும் ‘Game pin’ கொண்டு இணைய விளையாட்டில் சேர்ந்தவுடன்
பெயர் பட்டியலை காண முடியும். அனைத்து மாணவர்களும் இந்த விளையாட்டில் சேர்ந்ததை உறுதிப்படுத்திய பிறகு ‘Start’ தெரிவு செய்யவும்.
14. மாணவர்கள் கேள்விகளை வாசித்து தன்
கணினியில் பதிலை தெரிவு செய்யவும்.
15.'Kahoot' மற்றும் 'Quizizz' இரண்டிற்கும் மிகப் பெரிய வேறுப்பாடு ஒன்றுமில்லை, 'Kahoot'-ல் மாணவர்கள் கேள்விக்கான பதிலை அளிப்பதற்குக் கணினியில் இடம்பெற்றுள்ள வர்ணங்களை மட்டுமே கொண்டு பதிலளிக்க முடியும். எனவே, ஆசிரியர்கள் கேள்விகளைத் திரையில் காண்பிக்க வேண்டும். ஆனால், 'Quizizz' இணைய விளையாட்டில் கேள்விகளைத் மாணவர்கள் தன் கணினியிலே காண முடியும். ஆகவே, நிர்மபடிம உருகாட்டி (LCD PROJECTOR), விவேக தொலைக்காட்சி இல்லையென்றாலும் மாணவர்கள் தன்னுடைய கணினியிலே கேள்விகளை வாசித்து பதிலை அளிக்க முடியும்.















Comments
Post a Comment